கும்பகோணம் அசூர்-பழைய பாலக்கரை சாலை பராமரிப்பின்றி இருக்கிறது. சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்து உள்ளது. சாலை மிகவும் குறுகலாகவும் உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.