பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கார்குடியில் இருந்து பெருமத்தூர் செல்லும் சாலை மண் சாலையாக உள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தார்சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட நிலையில் அடுத்தக்கட்ட பணிகளை தொடராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.