சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்

Update: 2025-09-14 10:51 GMT

சென்னை புதுப்பேட்டை டிரைவர் தெருவின் இரு புறங்களிலும் குடியிருப்புவாசிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் பழைய கார்களை மர்ம நபர்கள் நிறுத்தியுள்ளார்கள். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் சாலையை முறையாக பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. மேலும் அங்குள்ள ரேஷன் கடைக்கு முன்பாகவும் இதே நிலை நீடிப்பதால் பயனாளிகள் பொருட்களை வாங்கி செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகார்கள் சாலையின் இருபுறங்களும் அத்துமீறி நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்