பெயர்ந்து வரும் இன்டர்லாக் கற்கள்

Update: 2025-09-14 10:23 GMT

கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியில் ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தின் மேற்புறம் இன்டர்லாக் கற்கள் பெயர்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. அதில் ஏறி, இறங்கும்போது நான்கு சக்கர வாகனங்களின் அடிபாகம் சாலையில் உரசுகிறது. இதனால் இன்டர்லாக் கற்களை முறையாக வைத்து சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்