சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-09-14 07:41 GMT

மேலசங்கரன்குழி ஊராட்சிக்கு உட்பட்ட காரவிளை நரிகுளம் அருகே உள்ள சாலையில் சீரமைக்கப்பட்டு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. அப்போது அதன் இணைப்பு சாலையான பன்றிவாய்க்கால் சாலையின் குறுக்கே ஒரு சிறுபாலம் கட்டப்பட்டது. அந்த பாலம் இணைப்பு சாலையின் ஒரு பகுதி வரை மறித்து கட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் கனரக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அந்த பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைப்பு சாலை பகுதியை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜகோபால், பிள்ளையார் விளை.

மேலும் செய்திகள்