சங்கராபுரம் மும்முனை சந்திப்பு அருகே வேகத்தடையில் உள்ள வெள்ளை வர்ண கோடுகள் அழிந்த நிலையில் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவ்வழியே வரும்போது வேகத்தடை இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்பட்டு வந்தது. இதுகுறித்த செய்தி படத்துடன் கடந்த வாரம் புகார்பெட்டியில் வெளியானது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த வேகத்தடையில் வர்ணம் பூசி உள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.