ரிஷிவந்தியம் ஒன்றியம் மரூர் ஊராட்சி மேட்டூர் கிராமத்திலிருந்து வாணாபுரம் புதூர் கிராமத்தை இணைக்கும் சாலையில் 100 மீட்டர் அளவிற்கு தார் சாலை அமைக்கப்படாமல் மண் சாலையாக உள்ளது. இதன் காரணமாக மழைக்காலங்களில் இச்சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.