திருச்சி மாவட்டம் முசிறி கோமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட காவேரிபாளையத்தில் இருந்து புதூர்பட்டி கம்ப பெருமாள் கோவில் செல்லும் தார்சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த தார்சாலை பிரிவில் இருந்து வடக்கு புதூர்பட்டி வழியாக தெற்கு புதூர்பட்டி கிழக்கண்ணுக்குளம் செல்லும் தார்சாலையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.