பண்ருட்டி- விழுப்புரம் சாலையில் புதுப்பேட்டை, ஒரையூர், கரும்பூர் ஆகிய இடங்களில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. மேலும் வாகனங்களின் வேகத்தை குறைக்கவும், பொதுமக்களின் நலன் கருதியும் நெடுஞ்சாலைத்துறையினர் குறிப்பிட்ட இடங்களில் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.