திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கீரம்பூர் கிராமத்தில் இருந்து மருவத்தூர் செல்லும் பாதையில் உள்ள பாலம் கடந்த பல நாட்களாக பழுதடைந்து உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.