புதிய தார்சாலை அமைக்க வேண்டும்

Update: 2025-09-07 13:54 GMT

பெரம்பலூர் நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் அமைத்த பின்பு மண்ணை கொண்டு பள்ளம் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை பெய்யும் போது சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்