சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றார்கள். ஆஸ்பத்திரியின் பஸ் நிறுத்தத்தின் நடைமேடைகளில் அமைக்கப்பட்டுள்ள கற்கள் நீண்ட நாட்களாக சேதமடைந்து தனியாக பெயர்ந்து ஆபத்தான வகையில் உள்ளது. இதனால் அதை கடந்து செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். மேலும் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் சிரமம் அடைகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அதனை முழுமையாக சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.