மதுரை மாவட்டம் மேக்கிழார்பட்டி போஸ்ட் கீரிபட்டி கிராமத்தில் இருந்து பாப்பப்பட்டி வரை செல்லும் சாலை முற்றிலுமாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சந்தைக்கு செல்லும் பொதுமக்கள், கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் அவதி அடைகிறார்கள். இதனால் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட சாலையை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?