பாலூத்து கிராமத்திற்கு காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ -மாணவிகள் வசதிக்காக அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக இந்த பஸ் இயக்கப்படுவதில்லை. இதனால் மாணவ மாணவிகள் பள்ளி செல்வதற்கு 3 கிலோமீட்டர் தொலைவு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலூத்து கிராமத்திற்கு மீண்டும் பஸ் சேவையை தொடர வேண்டும்.