சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2025-08-31 15:24 GMT

கடமலைக்குண்டுவை அடுத்த மயிலாடும்பாறையில் இருந்து பொன்னன்படுகைக்கு செல்லும் சாலையின் இருபுறமும் தென்னந்தோப்புகள் உள்ளன. மேலும் அந்த பகுதியில் அமைக்கப்பட்ட சாலை தோட்ட பகுதியைவிட சற்று மேடாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையோரம் பள்ளமாக காட்சியளிக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையின் இருபுறமும் மண்ணை நிரப்பி சமன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி