போடி பி.எச். சாலையில் உள்ள தனியார் மதுபான கடைக்கு வரும் மதுப்பிரியர்கள் மதுபோதை தலைக்கேறியதும், சாலைக்கு வந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சாலையில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே தனியார் மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.