நெல்லை டவுன் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து பேட்டை செல்லும் காயிதே மில்லத் சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இந்த சாலையில் பாதாள சாக்கடை குழாய் பதிப்பதற்காக தோண்டிய பின்னர் ஜல்லி கற்களால் மூடி உள்ளனர். இதனால் குண்டும் குழியுமாக சாலை மாறியதால் அடிக்கடி வாகன விபத்துகள் நிகழ்கின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.