திண்டுக்கல் நாகல்நகரில் இருந்து அண்ணாமலையார் பெண்கள் பள்ளிக்கு செல்லும் சாலையின் குறுக்காக அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாய் பாலம் சேதமடைந்த நிலையில் இருக்கிறது. மேலும் அங்குள்ள சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பரவி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாக்கடை கால்வாய் பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்.