கம்பத்தை அடுத்த சுருளிப்பட்டியில் இருந்து முல்லைப்பெரியாற்றுக்கு செல்லும் வழியில் உள்ள சுகாதார வளாகம் உள்ளது. இந்த வளாகத்தின் அருகே சாலையின் குறுக்காக கட்டப்பட்ட சாக்கடை கால்வாய் பாலம் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாக்கடை கால்வாய் பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்.