கிடப்பில் போடப்பட்ட தார்ச்சாலை பணி

Update: 2025-08-24 16:42 GMT

மதுரை நகர் ஜெய்ஹிந்த்புரம் பகுதி ஜீவாநகர் 2-வது தெருவில் தார்ச்சாலை போடுவதற்காக சாலையில் கற்கள் கொட்டப்பட்டு பல வாரங்கள் ஆகியும் தற்போது வரை சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அச்சாலையில் பயணிக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.. மேற்கண்ட சாலையை தவிர சுற்றி உள்ள தெருக்களில் புதிய சாலை போடப்பட்டது குறிப்பிடதக்கது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் புதிய தார்ச்சாலை அமைத்து தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்