நெல்லை டவுன் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து பேட்டை செல்லும் சாலை பாதாளச்சாக்கடை பணிகளுக்காக உடைக்கப்பட்டு மேடு பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வப்போது வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே மேடு பள்ளமாக உள்ள இந்த பகுதியில் தார்சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.