அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் முத்துசேர்வாமடம் ஊராட்சி நெல்லித்தோப்பு கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள பெருமாள்கோவில் தெரு சாலை மண்சாலையாக உள்ளதால் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக குட்டை போல் காட்சியளிக்கிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்சாலையை தார்சாலையாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.