சித்தோடு- பவானி சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே தார்சாலையின் பாதி அளவுக்கு மேல் குழி தோண்டப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி அதிலிருந்து கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வெளியேறிக்கொண்டு இருக்கிறது. இந்த சாலை வழியாக பள்ளிக்கூட மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் அடிக்கடி சென்று வருகின்றனர். இந்த குழியால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?