கிடப்பில் சாலை பணி

Update: 2025-08-17 16:06 GMT
கடலூர் அடுத்த காராமணிக்குப்பம் ஊராட்சியில் காளி கோவில் பின்புறம் உள்ள ராஜாராம் நகர், சீத்தாராம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள சில நகர்களில் சாலைப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தன. கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்ட பணிகள் தற்போது வரை நடைபெறவில்லை. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாா்களா?

மேலும் செய்திகள்