திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட எம்.ஆர் நகர் விரிவாக்கத்தில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்கு கால்வாய் மற்றும் சாலை பராமரிப்பு பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. மழைக்காலத்தில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்குவதால் இங்குள்ள பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகுகிறார்கள். மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகமாவதால் நோய்தொற்று ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி துறை அதிகாரிகள் இதை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.