பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள போஸ்ட் ஆபீஸ் தெருவில் சாலையோரம் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் 2 நான்கு சக்கர வாகனங்கள் சாலையை கடக்கும்போது அதிக அளவில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.