தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2025-08-17 11:47 GMT

திருச்சி நகரப்பகுதியில் உள்ள அரிஸ்டோ ரவுண்டானாவின் கீழ்பகுதியில் திண்டுக்கல்லில் இருந்து திருச்சி வரும் சாலையில் இரும்பு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் திண்டுக்கல் சாலையில் இருந்து வரும்போது பழைய பஸ் நிலையம் சென்று ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகளை அகற்றினர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்