கூடலூர் நகரில் தேசிய நெடுஞ்சாலையில் பலத்த மழை பெய்யும்போது தண்ணீர் தேங்கி குளம் போல் காணப்படுகிறது. இதனால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் நடந்து செல்லவும் முடியவில்லை. சாலையோரம் உள்ள கால்வாயில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீர் சீராக செல்ல வழி இல்லாமல் சாலையில் ேதங்குகிறது. எனவே இதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.