தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2025-08-10 16:14 GMT

கரூர் மாவட்டம், கடம்பங்குறிச்சி ஊராட்சி, அருமைகாரன் புதூர் பகுதியில் ஏரளாமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப் பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இதை அடுத்து புதிய சாலை அமைக்க பழைய சாலை தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து முடித்து புதிய சிமெண்டு சாலை அமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்