பிரம்மதேசம் அடுத்த சிறுவாடி ஊராட்சியில் பல்வேறு இடங்களில் மண் சாலைகள் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் இந்த சாலைகள் சேறும், சகதியுமாக மாறுவதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு புதிதாக சிமெண்டு சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.