புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, காரையூர் அருகே உள்ள மேலத்தானியத்திலிருந்து சூரப்பட்டி, கண்ணுக்குழி வழியாக ஊனையூர் செல்லும் தார்சாலை உள்ளது. இச்சாலையில் இரு புறமும் மழையினால் மண் அறிக்கப்பட்டு பள்ளமாக காணப்படுகிறது. இந்த தார் சாலை அகலம் இல்லாமல் இருப்பதால் எதிர்வரும் வாகனங்களுக்கு வழி விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையினை ஆய்வு செய்து இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.