சேரன்மாதேவி பைபாஸ் சாலையில் உள்ள பாலம் பகுதியில் சர்வீஸ் ரோடு குறுகலாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள் நடுவழியில் சிக்கி தவிக்கின்றன. எனவே அங்கு குறுகலான சாலை என்று அறிவிப்பு பலகை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.