புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம், ஆலங்குடி சாலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள பாலத்தின் அருகே பல்வேறு பகுதிகளில் இருந்து குப்பை கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து கொட்டுகின்றனர். இதனால் பாலத்தில் குப்பைகள் அடைத்து தண்ணீர் செல்ல முடியாமல் உள்ளது. மேலும் சாலையோரம் உள்ள குப்பை கழிவுகள் சாலையில் பரவி துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே வாகனங்களில் வந்து குப்பைகளை கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.