சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 4 ரோடு செல்லும் பிரதான சாலையில் 2 இடங்களில் வேகத்தடைகள் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இரவில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் வேகத்தடையில் ஏறி செல்லும் போது தடுமாறி விழுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் அந்த பகுதியில் வேகத்தடை இருப்பது தெரியாத அளவிற்கு இருளாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடையின் உயரத்தை குறைக்கவும், தெருவிளக்கு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.