தரமற்ற புதிய சாலை

Update: 2026-01-11 13:47 GMT

நல்லம்பள்ளி அடுத்த மாதேமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மாதேமங்கலம் முதல் உங்கரானஅள்ளி வரை 2 கிலோ மீட்டர் தூரம், விரிவுபடுத்தப்பட்ட புதிய தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே உள்ள பழைய சாலையை அகற்றப்படாமல், குண்டும் குழியுமாக இருக்கும் பழைய தார்சாலை மீது, தற்போது புதிய தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் இந்த சாலை சில நாட்களில் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே பழைய தார்சாலையை அகற்றிவிட்டு, தரமாக புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்