புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் கடைவீதி பகுதியில் ஏராளமான மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சாலையோரங்களில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் குறுக்கும், நெடுக்குமாக செல்வதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சாலையில் படுத்துக்கொள்வதால், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.