பெரும்பாலையில் இருந்து சாமத்தாள் செல்லும் சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த தார்சாலை தற்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பயன்படுத்த முடியாதபடி மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதனால் சேதமடைந்த தார்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.