சேலம் மாநகராட்சி 49-வது வார்டு நெத்திமேடு புத்தூர் இட்டேரி ரோடு கொடம்பைக்காடு பகுதியில் கருப்பணார் கோவில் தெரு உள்ளது. இங்கு 70-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் பாதாள சாக்கடை கால்வாய்க்காக சாலையை தோண்டி 3 மாதங்கள் ஆகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர், முதியோர் கீழே விழுந்து காயமடைந்தனர். இது குறித்து கடந்த வாரம் ‘தினத்தந்தி’யில் படத்துடன் பிரசுரிக்கப்பட்டது. இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட உதவிய ‘தினத்தந்தி’க்கும் ஊர் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.