தார்சாலை போடலாமே!

Update: 2026-01-11 14:12 GMT

ஆத்தூர் ஒன்றியம் கல்லாநத்தம் ஊராட்சி நெசவாளர் காலனி முதல் சந்திரகிரி வரை சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே பள்ளம், பள்ளமாக உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியை ஆய்வு செய்து தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கலாமே!

மேலும் செய்திகள்