வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-01-11 13:54 GMT

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சியில் இருந்து காலாடிபட்டி சத்திரம் வரை செல்லும் சாலையின் இருபுறங்களிலும் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையோரம் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்