விபத்துகளை தடுக்க வேகத்தடை

Update: 2026-01-11 13:48 GMT

தர்மபுரி-பென்னாகரம் சாலையில் புதிய புறநகர் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் சென்றுவர நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் சாலையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு வாகனங்கள் செல்ல சாலையில் இடைவெளி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வாகனங்கள் சாலையை குறுக்காக கடந்து திரும்பும்போது அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே இந்த பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் வேகத்தடைகள் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்