விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட்டில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் டி.பி.மில்ஸ் ரோடு சீரமைப்பிற்காக தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றது. இந்த பணிகளின் தாமதத்தால் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சாலைப் பணிகளை விரைவுபடுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.