போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2025-08-10 11:58 GMT

திருச்சி நகரப்பகுதியில் உள்ள அரிஸ்டோ ரவுண்டானாவின் கீழ்பகுதியில் திண்டுக்கல்லில் இருந்து திருச்சி வரும் சாலையில் இரும்பு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் திண்டுக்கல் சாலையில் இருந்து வரும்போது பழைய பஸ் நிலையம் சென்று ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் காலை மற்றும் மாலை நேரத்தில் செல்லும்போது அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்