கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே புங்கம்பாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மொட்டையாண்டவர் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு புங்கம்பாடி, அரவக்குறிச்சி, மலைக்கோவிலூர், உத்திராசப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேற்கண்ட கிராம பகுதிகளில் உத்திராசப்பட்டியிலிருந்து மொட்டையாண்டவர் முருகன் கோவிலுக்கு செல்லும் தார் சாலை மிகவும் சிதிலமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே இந்த தார் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.