நம்பியூர் கோசனம் கிராமம் அருகே மூணாம்பள்ளி- வெள்ளையகவுண்டன்புதூர் செல்லும் வழியில் உள்ள சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் மாணவ-மாணவிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். அடிக்கடி கீழே விழுந்து விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.