ஈரோடு- பவானி மெயின் ரோட்டில் ஆர்.என்.புதூர் அருகே உள்ள மாயவரம் பஸ் நிறுத்தம் வழியாக வாகனங்கள் மிகவும் வேகமாக சென்று வருகின்றன. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் சாலையை கடக்கும் போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த சாலையில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.