கிடப்பில் சாலை பணி

Update: 2025-08-03 16:05 GMT
ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி 2-வது வார்டு ஸ்ரீவக்காரமாரியில் இருந்து வயல்வெளிக்கு செல்லும் பகுதிக்கு புதிதாக சாலை அமைக்க ஜல்லிகள் கொட்டப்பட்டன. ஆனால் அதன் பின்னர் அங்கு மேற்கொண்டு பணியை மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் விளைபொருட்களை வாகனங்களில் விற்பனைக்கு எடுத்து செல்ல விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி