குண்டும், குழியுமான சாலை

Update: 2025-08-03 12:56 GMT

பெரம்பலூர் - அரியலூர் சாலை போடப்பட்டு பல ஆண்டுகளான நிலையில், இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்