பெரம்பலூர் மாவட்டம் புதுவேலூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மெயின் ரோட்டில் இருந்து பழைய வேலூர் பள்ளிக்கூடம் வழியாக மங்கூன் சாலையை இணைக்கும் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.