சாலையில் பள்ளங்கள்

Update: 2025-07-27 16:53 GMT

கூடலூர் நகராட்சி அலுவலகம் அருகே ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ராஜகோபாலபுரம் பகுதியில் உள்ள சாலை ஆகியவற்றின் குறுக்கே உள்ள மழைநீர் வடிகால் பாலத்தின் மேல்புறத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் வாகனங்களை சரியாக ஓட்டிச்செல்ல முடிவதில்லை. இதனால் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. குறிப்பாக ஆட்டோக்களில் பயணம் செய்யும்போது நோயாளிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே அங்கு குறிப்பிட்ட இடங்களில் உள்ள பள்ளங்களை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்